மலையக சிறுவர்களின் கல்விக்கு      என்ன உத்தரவாதம்

கடந்த ஐந்து மாதங்களுக்குள் 220 சிறுவர்கள் சம்மந்தமான முறைப்பாடுகள் கிடைத்துளளதாக இலங்கையின் சிறுவர் பாதுகாப்புச்சபை தெரிவித்துள்ளது.அதேநேரம் அன்மையில் பௌத்தாலோக்க மாவத்தை கழிவு வாய்க்காலில் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஜுவராணி (14வயது),சுமதி(15வயது) என்ற சிறுமிகளின் சடலங்கள் மிதந்தன. வீட்டுவேலைக்கு வந்த சிறுமிகளுக்கே இந்த கதி.
           சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பற்றி எல்லோரும் அறிந்திருந்தாலும் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமையான கல்விபெறுதல் மலையக சமூகத்திடையே மறுக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த சின்னஞ்சிறார்களை வேலைக்கமர்த்தி பணம் சம்பாதிக்கின்றனர்.   
           “நாங்க என்ன செய்றது நாங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை அப்படி என்ன பண்றது மழைக்குகூட ஸ்கூல்ல ஒதுங்க விட்டது இல்ல வறுமை எங்கள ஆட்டிப் படச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது. எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குராங்க அப்டி இருக்கயில வீட்டு வேலதான் சரியாப் படுது.” என்கிறார் சிறுவயதுமுதல் வீட்டுவேலைகளில் ஈடுபட்டு வரும் சித்ரா(22 வயது)                      
           “எனது பிள்ளையின் படிப்புக்கு மாதம் 5ஆயிரம் செலவு செய்கிறேன்” என்று சொல்லும் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளியை தமது வேலைக்காக வைத்திருக்கிறார்கள். சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டபடி குற்றம் என்று தெரிந்திருந்தும் மலையக மக்களின் வறுமையையும் அறியாமையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
          உலகலாவிய ரீதியில் இலங்கை கல்விநிலையில் 99வீதம் முன்நிலையில் உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு; காலை உணவு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் மலையக  பிள்ளைகலை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….?
          மலையகத்தில் ஆண் பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளே கல்வியில் முன்னனியில் இருக்கிறனர். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண்பிள்ளைகளது கல்வியே பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம் தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை , திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்வதை தடை செய்தல், வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்துகொள்ளுமாரு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமை,
          விசேடமாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடிமாட்டார்கள். இது போன்ற விடயங்களால் கல்வி புரக்கனின்னப் படுகிறது.
          ஒருசிலர் இவ்வாரான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள். இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சுpல கருத்தரங்குகளையும் விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாரான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது.
          மக்கள் மத்தியில் இவ்வாரான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் மாறுபட கூடியவை. பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புனர்வை ஏற்படுத்த மலையகத்தில் வாழும் படித்த சமூகம் ஒன்றினைய வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகலின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது கடமைகளை சிந்தித்து செயற்பட வேண்டும்.
;          சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும் குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உனர்த்துவதும் உங்களது கடமை.  அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் வெளியுலகை பொருத்த வரையில் உரிய பாதுகாப்பு கிடையாது. சற்று சிந்தியுங்கள் அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அழியுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s